Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிதைந்த எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்ட மாணவி… கொலையா? தற்கொலையா? காவல்துறை தீவிர விசாரணை…!

காணாமல் போன மாணவி எலும்பு கூடாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், எஸ். அம்மாபாளையம் சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஞானசௌந்தர்யா கோயம்புத்தூரில் 12ம் வகுப்பு படித்து வந்துள்ளார். பொதுத்தேர்வு முடிந்து கோவில் திருவிழாவிற்கு கடந்த 9 மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.திருவிழா நடைபெற்ற நேரத்தில் அவரை காணவில்லை என கூறப்பட்டது.

எங்கு தேடியும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை அடுத்து, பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதற்கிடையில், எஸ்.அம்மாபாளையம் பகுதியில் உள்ள காட்டுபகுதியில் ஒரு சடலம் தூக்கில் தொங்குவதாகவும் அதில், சதைகள் இன்றி எலும்பில் ஒரு சில பகுதிகள் மட்டும் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

பெருமாள் தன் மகளாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் அங்கு சென்று பார்த்த போது எலும்பு கூட்டில் கிடந்த செயினை வைத்து அது தங்களது மகள் என்பதை கண்டெறிந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதனை அடுத்து, அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் புகார் அளித்த நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் எலும்பு கூடாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version