ஆந்தைக்கு டிரைவராக மாறிய காவலர்! பறவையை காப்பாற்ற காரில் பயணித்த உயிர்நேயம்.!!

0
181

இங்கிலாந்து நாட்டின் ஹாம்ப்சைர் மாநில காவல்துறை அதிகாரி தன்னுடைய காரில் ஆந்தையுடன் பயணித்த சம்பவம் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஹாம்ப்சைர் மாநில காவல்துறை இணைய பக்கத்தில் படத்துடன் செயதி வெளியாகியுள்ளது. அதில் காவல்துறை அதிகாரி ஒருவர் காரை ஓட்டிச் செல்கிறார், அவரது பின் இருக்கையில் ஆந்தை ஒன்று ஹாயாக உட்கார்ந்து வருகிறது.

 

அந்த காவலர் பணியில் இருந்த இடத்தில் ஆந்தை பறக்க முடியாமல் தவித்துள்ளது. இதை கவனித்த பின்னர் உடனே ஆந்தையை மீட்டு விங்ஸ் ஆப் டான் சிகிச்சை மையத்திற்கு கொண்டு சென்றுள்ளார். தலையில் அடிபட்ட காரணத்தால் பறக்க முடியாத நிலையில் இருப்பதாக சிகிச்சை அளிப்பவர்கள் கூறினர்.

 

இந்த ஆந்தைக்கு “லக்கி’ என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. முழுமையாக குணமடைந்த பின்னர் விண்ணில் பறக்கும் என ஹாம்ப்சைர் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து வெளியானவுடன் பலர் அந்த காவலரை வாழ்த்தி வருவதோடு ஆந்தையை ரசித்து வருகின்றனர். மனிதனாக பிறந்தவர்கள் எல்லா உயிர்களையும் நேசிக்க வேண்டியதை இந்த செய்தி உணர்த்துகிறது.