Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாலையை துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்த காவல் அதிகாரி:! குவியும் பாராட்டு!

சாலையை துடைப்பத்தால் பெருக்கி சுத்தம் செய்த காவல் அதிகாரி:! குவியும் பாராட்டு!

சேலம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை,கோவை, பெங்களூர், செல்லும் பேருந்துகளும் ஏராளமான லாரி மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களும் சென்று வரும் சாலையில் கட்டுமான பணிக்காக ஜல்லிக் கற்களை ஏற்றி சென்ற
லாரிலிருந்து கற்கள் சரிந்து சாலையில் விழுந்து கிடந்தது.

இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் வேகமாக செல்ல முடியாமல் போக்குவரத்து பெரிதும் பாதித்தது.இந்நிலையில் நேற்று இரவு அந்த சாலையின் வழியே சென்ற கிச்சிப்பாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஷெரீஃப் ஜல்லி கற்கள் கொட்டிக் கிடப்பதை பார்த்து விட்டு,இதனை அப்புறப்படுத்த காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதைதொடர்ந்து,சம்பந்தப்பட்ட ஆட்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் விபத்து நேர்ந்து விடக்கூடாது என்று எண்ணி காவல் ஆய்வாளரே சிதறிக்கிடந்த ஜல்லி கற்களை அப்புறப்படுத்தி,மேலும் சாலையை துடைப்பத்தால் பெருக்கி சுத்தப் படுத்தி உள்ளார்.இதன் பிறகு இந்த வழியே வாகனங்கள் இயல்பாக செல்லத் தொடங்கியுள்ளது. காவல் ஆய்வாளரின் இந்த செயலை அறிந்த சேலம் மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் அவர்கள், அவரை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

 

 

Exit mobile version