விவசாயிகள் விஷயத்தில் போலீஸ் காட்டும் மெத்தனம்! சுப்ரீம் கோர்ட் அதிருப்தி!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து அதாவது கிட்டத்தட்ட ஒரு வருடமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்கு மத்திய அரசு என்னதான் சாக்கு போக்கு சொல்லி சட்டங்களை சிறிது கட்டுப்பாடுகளுடன் சொன்னாலும், அவர்கள் அதற்கு ஒத்து கொள்ளாமல் முழுமையாக வேளாண் சட்டங்களையே விட்டுவிடுங்கள் என்று கூறுகிறார்கள்.
அதன் காரணமாக அவர்களுக்கும் அரசுக்கும் ஒத்துப் போகாமல் இந்த போராட்டம் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதில் விவசாயிகள் பலர் உயிரிழந்துள்ளனர் என்பதும் நமக்கு வேதனை அளிக்கிறது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில் லக்கிம்பூர் என்ற கிராமத்தின் அருகே நிகழ்ச்சி ஒன்றுக்கு தலைமை தாங்க வந்த முதலமைச்சர் வருவதை அறிந்த விவசாயிகள், அவரை தடுக்க நினைத்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
சாதரணமாக நின்ற விவசாயிகள் மீது காரை ஏற்றி அமைச்சரின் மகன் ஒருவன் அதை வன்முறையாக பதிவு செய்துள்ளான். அது மிகவும் பரபரப்பாக செய்திகளில் வெளியாகிய வண்ணம் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது சுப்ரீம் கோர்ட் அந்த விஷயத்தில் மிகவும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது. லக்கிம்பூர் வன்முறை சம்பவத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை கூட செய்யவில்லை என்று கூறி உள்ளது.
மேலும் விவசாயிகள் மீது ஏற்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு காவல்துறை மிகவும் மெத்தனமாக நடந்து கொள்வதாகவும் கூறியுள்ளனர். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியான என்.வி ரமணா அமர்வு இதுகுறித்துக் கூறுகையில், லக்கிம்பூர் வழக்கு விசாரணை நாங்கள் எதிர்பார்த்தது போல் இல்லை.
போலீசார் இது குறித்த தடயவியல் அறிக்கைகூட இதுவரை வெளியிடவில்லை. உத்திர பிரதேச அரசு அளித்த விசாரணை நிலை குறித்த அறிக்கையில் கூட எதுவுமே இல்லை என்றும் கவலை தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்போன்களை கூட காவல்துறையினர் இதுவரை பறிமுதல் செய்யவில்லை என்றும், இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையை, ஏன் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு கண்காணிக்க கூடாது? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இதனை அடுத்து வரும் வெள்ளிக் கிழமைக்குள் இதற்கு பதில் அளிப்பதாக உத்திரப்பிரதேச அரசு நீதிமன்றத்திற்கு பதில் தெரிவித்துள்ளது.