Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் காலியாக உள்ள காவலர் பணிக்கு தேர்வு!! 20 மையங்களில் நடைபெறும்!!

தமிழ்நாடு முழுவதும் காவலர்களுக்கு உடல்தகுதி தேர்வு சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா இரண்டாம் அலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் ஒத்தி வைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு தற்போது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

அதில் 11,741 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு வருகின்ற ஜூலை 26ஆம் தேதி முழு உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வு நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் உள்ளூர் காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப் படைகள் 3,784 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் மற்றும் சிறப்பு காவல்படை 6545, சிறைத் துறையில் 119, தீயணைப்பு துறையில் 1311 என மொத்தம் 11ஆயிரத்து 741 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.

மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப் பட்டது. இதனையடுத்து இந்த பணிகளுக்கான தேர்வு அக்டோபர் மாதம் நடைபெற்ற இந்தத் தேர்வில் மொத்தம் 5 லட்சம் பேர் கலந்து கொண்டனர். இதில் மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் எழுத்து தேர்வின் மூலமாக வெற்றியை பெற்றனர்.

தற்போது அவர்களுக்கான உடல்தகுதி மற்றும் உடல்திறன் தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தேர்வுகள் மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

அதன்படி இரண்டாம் நிலை காவலர் இரண்டாம் நிலை காவலர் மற்றும் தீயணைப்பு பதவிகளுக்கான காவலர் பொதுத்தேர்வு 2020 சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் உடல்கூறு அளத்தல் அதனைத் தொடர்ந்து உடற்தகுதி தேர்வு, உடல்திறன் போட்டிகள் ஆகியன தமிழகம் முழுவதும் 20 மையங்களில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கடிதத்தை http://www.tnsurbonline.org/ இந்த இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version