கஞ்சா விற்கும் சப்ளையராக மாறிய போலீசார்! வெளிவந்த திடுக்கிடும் உண்மை!
கஞ்சா விற்பது சட்டப்படி குற்றம் என்று கூறி வரும் நிலையில் உயர் அதிகாரிகளே அந்த தொழிலில் இறங்கி வேலை செய்ய முன்வந்து விட்டனர்.அவ்வாறு ஓர் சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.சென்னையில் அயனாவரம் பகுதியில் ஒருவர் கஞ்சாவை வேறு ஒருவருக்கு மாற்றி விடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.இந்த தகவலின் அடிப்படையில் துணை கமிஷ்னர் கார்த்திகேயன் தனி படை வைத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.அங்கு ஒருவர் சந்தேகிக்கும் படி வெகு நேரமாக கையில் ஓர் பை வைத்து நின்றுள்ளார்.
போலீசார் அதனை கண்டறிந்து அவரை விசாரித்தனர்.இந்த விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளது.தற்போது சந்தேகிக்கும்படி கைது செய்யப்பட்டவரின் பெயர் திலீப்குமார்.இவர் சென்னை முகப்பேறு பகுதியில் வசித்து வருகிறார்.இவரது தந்தை சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்துள்ளார்.அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.பிறகு கருணையின் அடிப்படையில் அவர் தந்தையின் வேலை அவரது தம்பிக்கு கிடைத்துள்ளது.இவரது தம்பி அயனாவரம் பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் தம்பியை காண அவ்வப்போது திலீப்குமார் அங்கு செல்வது வழக்கம்.அப்போது அங்கு வசிக்கும் சக போலீசாருடன் நட்புறவு ஏற்பட்டுள்ளது.அதில் ரயில்வே போலீசார் சக்திவேல் மற்றும் செல்வகுமாருடன் அதீத நெருக்கத்தில் இருந்துள்ளார்.இதில் ரயில்வே போலீசார் சக்திவேல் சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா விற்று வந்துள்ளார்.அந்த கஞ்சாவை விற்று தரும்படி திலீப்குமாரிடம் கேட்டுள்ளார்.திலீப்குமார் அதனை விற்க முயன்றபோது வசமாக சிகிக்கொன்டுள்ளார்.
இவ்வாறு அவரை விசாரணை செய்ததில் திடுக்கிடும் உண்மைகள் தெரியவந்துள்ளது.சக்திவேல், செல்வகுமார் இரு போலீசார் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.தற்பொழுது மூன்று பேர் மெது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.குற்றம் நடப்பதை தடுக்க வேண்டியவர்களே குற்றம் செய்யலாமா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.அதுமட்டுமின்றி போலீசாரே இவ்வாறு சம்பவத்தில் ஈடுப்பட்டது காவல்துறைக்கு சற்று அதிர்ச்சியை கொடுக்கிறது.