Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உயிரை காப்பாற்ற உதவிய போலீஸ்: முதலுதவி சிகிச்சை அளித்து கணவரை காப்பாற்றிய மனைவி!

உயிரை காப்பாற்ற உதவிய போலீஸ்: முதலுதவி சிகிச்சை அளித்து கணவரை காப்பாற்றிய மனைவி!

டெல்லியில் இருந்து கோழிக்கோடுக்கு சென்ற ரெயிலில் கேசவன் மற்றும் அவரது மனைவி தயா பயணம் செய்தனர். பயணத்தின் போது ரெயில், உத்தரபிரதேசத்தில் மதுரா அருகே சென்று கொண்டிருந்த போது கேசவனுக்கு திடிரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரது மனைவி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து ரெயில்வே போலீசார் மதுரா ரெயில் நிலையத்தில் ரெயிலை நிறுத்தி கேசவனை கீழே இறக்கினர்.

அப்போது கேசவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால், ரயில்வே போலீஸார் அவரது மனைவியிடம் சி.பி.ஆர். முதலுதவி சிகிச்சை அளிக்க கூறினர். அதன்படி அவர்களின் உதவியுடன் கேசவனுக்கு அவரது மனைவி முதலுதவி சிகிச்சை அளித்தார். இதனால் கேசவன் சீராக மூச்சுவிட ஆரம்பித்தார். பின்னர் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். கணவருக்கு சரியான நேரத்தில் சி.பி.ஆர். சிகிச்சை செய்ய அறிவுறுத்திய போலீசாருக்கு தயா நன்றி தெரிவித்தார்.

 

Exit mobile version