Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வீண் தகராறு செய்த அதிமுக எம் எல் ஏ…! அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறை…!

அதிமுகவில் இருந்து சமீபத்தில் விலகி திமுகவில் இணைந்தார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தலைமையில் விளாத்திகுளத்தில் கொடியேற்று விழா நடந்தது அந்த சமயம் அங்கு வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் தலைமையிலான அதிமுக கட்சியினர் கொடியேற்றும் இடத்திற்கு வந்து தகராறு செய்தனர் இதன் காரணமாக இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது அதனை அடுத்து அதிமுகவினர் மீது காவல்துறையினர் தடியடி நடத்தினார்கள்.

இந்த சூழ்நிலையில் ஊரடங்கு தடையை மீறி அதிக அளவில் கூட்டம் சேர்த்ததாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் உள்பட 104 நபர்கள் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர் கீதா ஜீவன் உள்பட 500 நபர்கள் என மொத்தமாக சேர்த்து 604 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

Exit mobile version