Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அண்ணியின் அந்தரங்க படத்தை மனைவியிடம் காட்டிய காவல்துறை அதிகாரி! அடுத்து அரங்கேறிய கொடூரம்!

அண்ணியின் அந்தரங்க படத்தை மனைவியிடம் காட்டிய காவல்துறை அதிகாரி! அடுத்து அரங்கேறிய கொடூரம்!

சென்னையில் காவல் துறை அதிகாரியை திருமணம் செய்து கொண்ட 4 மாதங்களில் இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் ஒதியடிகுப்பம் என்ற பகுதியை சேர்ந்தவரான அருள் காவல் துறையில் பணியாற்றி வருகிறார். 38 வயதாகும் இவர் காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இவருக்கும், கடலூர் மாவட்டதிலுள்ள பண்ருட்டி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவரான வடிவேல் என்பவரின் மகள் ராஜேஸ்வரிக்கும் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இதனையடுத்து திருமணத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல் துறையினருக்கான குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு ராஜேஸ்வரி இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்டது குறித்து அருகிலுள்ளவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பட்டினப்பாக்கம் காவல் துறையினர் தற்கொலை செய்து கொண்ட ராஜேஸ்வரி உடலை மீட்டு ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட இந்த சம்பவம் குறித்து அருகிலுள்ளவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் தான் தற்கொலை செய்து கொண்ட ராஜேஸ்வரியின் தம்பி சரவணன் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் இது குறித்த புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது, “ கடந்த 20-ந்தேதி அவரது அக்கா ராஜேஸ்வரி செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார் என்றும், அப்போது அவர் அவரது கணவரும், அவரது அண்ணி வெண்ணிலாவும், ‘நீ வரும் போது என்ன கொண்டு வந்தாய், நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருக்க நீ இடையூறாக இருக்கிறாய், நீ வீட்டை விட்டு வெளியே போ அல்லது செத்து விட்டால் சொத்து அனைத்தும் எங்களுக்கே கிடைக்கும் என்றும் கூறி தினமும் கொடுமைப்படுத்துகிறார்கள்’ என கூறி அழுததாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்

மேலும் தனது செல்போனில் அண்ணியுடன் இணைந்துள்ள ஆபாச படங்களை காட்டி எனது அண்ணி எவ்வளவு அழகாக இருக்கிறார் பார் என்றும், அவரது கணவர் அடித்து துன்புறுத்துவதாக அக்கா கூறினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து நேற்று முன்தினம் நாங்கள் புறப்பட்டு சென்னை வந்து கொண்டிருக்கும் போதே, எனது அக்கா இறந்து விட்டார் என்ற தகவல் கிடைத்தது. எனவே எனது அக்காவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அதில் கூறியிருந்தார்.

அவர் அளித்துள்ள புகாரின் பேரில் பட்டினப்பாக்கம் இன்ஸ்பெக்டர் பீர்பாஷா இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Exit mobile version