ஊதிய உயர்வும்; வார விடுமுறையும் வேண்டும்! காவல்துறைக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை!!

0
136

ஊதிய உயர்வும்; வார விடுமுறையும் வேண்டும்! காவல்துறைக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை!!

பொது மக்களின் நலனை பாதுகாப்பதில் காவல்துறையின் பங்கு அளப்பரியது. சமூக நலனுக்காக தங்களையே அர்பணித்துக் கொண்டு வேலை பணிச்சுமை, நெருக்கடி போன்ற காரணங்களால் தற்கொலை செய்து கொள்வதும், பணியின் போதே பல்வேறு தாக்குதலை சந்திப்பதும் நடந்து வருகிறது. இதன் காரணமாகவே காவல்துறைக்கு போதுமான ஊதிய உயர்வும், வார விடுமுறையும் தர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்றார்.

மேலும், சமீபத்தில் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட கன்னியாகுமரி உதவி ஆய்வாளர் வில்சன் கொலையில் சம்மந்தபட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.இது சம்பந்தமாக அறிக்கையில் கூறியதாவது:

கேரள எல்லையில் உதவி ஆய்வாளர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன். வேலை நேரத்திலேயே ஒரு அரசு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே பயத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற சமூக அமைதியை கெடுக்கும் குற்றவாளிகளை கைது செய்து உடனடியாக சட்டப்படி தண்டிக்க வேண்டும். ஓய்வும், உறக்கமும் இல்லாமல் இரவு பகலாக பணியில் ஈடுபடும் காவலர்களின் துயரம் சொல்லி மாளாதவை. பிற அரசு ஊழியர்கள் விடுமுறை நாட்களையும், சுதந்திரமான வாழ்க்கையும் அனுபவிக்கிறார்கள். அவர்களைப் போல எந்த வழிமுறையும் இல்லாது தொடர்ந்து பணிச்சுமை, மன உளைச்சலில் உள்ளாகிற போதும் மன வலிமையுடன் தொடர்ந்து கடமை தவறாமல் பணியாற்றும் செயல் மகத்தானது.

உதவி ஆய்வாளர் வில்சனை கொன்றவர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவருக்கு எமது கண்ணீர் வணக்கத்தை செலுத்துகிறோம். இந்த கொலையை மையமாக வைத்து மத துவேசத்தில் ஈடுபடும் மத சூழ்ச்சிக்கு பலியாகாமல் இருக்க சமூக ஒற்றுமையும், அமைதியும் நிவுவதை உறுதி செய்ய வேண்டும் என்று நாம்தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சீமான் பேசினார்.