Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி

முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி, மாநில காங்கிரஸ் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அசோக் கெலாட் சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், சட்டசபையை உடனே கூட்டுவதற்கு கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவிடம் வலியுறுத்தி வருகிறார். நேற்று கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை, சட்டசபை சபாநாயகர் சி.பி. ஜோஷி சந்தித்து பேசினார்.
அப்போது தற்போதைய அரசியல் நிலைமை குறித்து கவர்னருடன் ஆலோசித்தார். கவர்னர் கல்ராஜ் மிஸ்ராவை ஆளுநர்  மாளிகை சென்று சந்தித்து சட்டசபையை கூட்டுவதாக வலியுறுத்தினார். ராஜஸ்தான் சட்டமன்றம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி  கூட்டப்படும் என்று அலுவலகத்தில் இருந்து ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.ஆகஸ்ட் 14 முதல் கூட்டும் அமைச்சரவை அனுப்பிய திட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்” என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Exit mobile version