Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கலைஞரின் பேனா சின்னம் கட்ட தடை விதிக்கப்படுமா? பசுமை தீர்ப்பாயம் கூறியது என்ன?

கலைஞரின் பேனா சின்னம் கட்ட தடை விதிக்கப்படுமா? பசுமை தீர்ப்பாயம் கூறியது என்ன?

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பயன்படுத்திய பேனாவின் வடிவத்தை,மெரினா கடலுக்கு நடுவே கலைஞரின் நினைவிடத்தில் உள்ளேயிருந்து கடலின் மேல் 360 மீட்டர் தூரத்தில்,சுமார் 137 அடியில் பிரம்மாண்டமாக கட்ட தமிழக அரசு திட்டமிட்டது.

இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது.இந்த திட்டத்திற்கு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி அளித்ததோடு மத்திய அரசும் தனது முதல் கட்ட அனுமதியை அளித்திருந்தது.

இதற்கிடையில் கலைஞரின் பேனாவின் திட்டத்திற்குடைக்கு தடை விதிக்க கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த ஆதித்தன் என்பவர் தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் பொதுநல வழக்கை தொடர்ந்தார்.அந்த வழக்கில் குறிப்பிட்ட உள்ளதவாறு:

சென்னை நேப்பியர் பாலம் முதல் கோவளம் வரையிலான கடலோரப் பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யும் பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அங்கு கட்டுமானம் பணிகள் மேற்கொண்டால்ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்படுவதோடு கடல் வளமும் பாதிக்கப்படும் என்றும் இதனால்கடலோர ஒழுங்கு மண்டல விதிகளின்படி நிபுணர்கள் குழுவை அமைத்து முறைகேடாக கட்டப்பட்ட அனைத்து கட்டுமானங்களை அகற்ற வேண்டும் என்றும்,கலைஞரின் இந்த பேனா சின்னத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கானது இன்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போதும் கலைஞர் பேனா நினைவு சின்னம் அமைப்பது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் மற்றும் சென்னை மாநகராட்சிஆகியவை 8 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.மேலும் இந்த வழக்கை அடுத்த ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Exit mobile version