அடி தூள் அனல்பறக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல்! அரசியல் கட்சிகள் மும்முரம்

0
122

தமிழ்நாட்டில் இருக்கின்ற 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள், என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகின்ற 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இன்றைய தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடந்த 28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறார்கள். முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை எதிர்த்து செய்யாததால் அதிக அளவில் சுயேட்சைகளே மனு தாக்கல் செய்தார்கள்.

ஆளும் கட்சியான திமுக கூட்டணியில் இருக்கின்ற காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, முஸ்லிம் லீக், உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இதில் காங்கிரஸ் கட்சியுடன் மட்டும் தொகுதி பங்கீடு குறித்து இழுபறி ஏற்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து டெல்லியிலிருந்து அந்த கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சென்னை வந்து திமுகவின் மூத்த நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து வார்டு பங்கீடு முடிவுக்கு வந்தது, திமுக அதில் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றுவிட்டது.

திமுக சார்பாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது, அதேபோல கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் பாஜக கணிசமான இடங்களை எதிர்பார்த்து பேச்சுவார்த்தை ஆரம்பித்தது, சில கட்டங்களாக நீடித்த பேச்சுவார்த்தையில் எந்தவிதமான சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. அதற்குள் அதிமுக தன்னுடைய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

கேட்ட இடங்கள் கிடைக்காத அதிர்ச்சியின் காரணமாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து களம் காண இருப்பதாக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை அதிரடியாக அறிவித்து பரபரப்பை உண்டாக்கினார்.

இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பாக வேட்பாளர்பட்டியல் பல கட்டங்களாக வெளியிடப்பட்டது, கூட்டணியில் இருக்கின்ற தமிழ் மாநில காங்கிரஸ், உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரு சில இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களும் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் களம்காணயிருக்கிறார்கள்.

அதே போல தனித்து போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி, தேமுதிக, கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி, நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர்.

அரசியல் கட்சியை சார்ந்தவர்கள் போட்டி போட்டுக்கொண்டு வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியிருக்கிறது. மனுத்தாக்கல் நாளையுடன் முடிவடையும் சூழ்நிலையில், நாளை மறுநாள் மறுபரிசீலனை செய்யப்படுகிறது.

அதன்பிறகு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இதன் பிறகு தேர்தல் பிரச்சாரம் களை கட்ட ஆரம்பிக்கும், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அந்த கட்சியின் மாவட்ட அமைச்சர்களும், மாவட்ட செயலாளர்களும் தற்போது பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டார்கள்.