நம்மை ஆண்டு கொண்டிருப்பவர்களுக்கு எதிரான அரசியல்!! எதிரியை உடைத்த விஜய்!!!

0
100
Politics against those who control us!! Vijay broke the opponent!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் தற்போதுள்ள ஆட்சியை குறித்து பேசியதை விரிவாக காண்போம்.

“பிறப்புக்கும் எல்லா உயிர்க்கும்” என்பதே நமது கொள்கையின் அடிப்படை என்று இக்கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் அனைவரும் என்னுடையவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவர் தற்போதுள்ள ஆட்சியை பற்றி கூறியதாவது :-

இப்பொழுதுள்ள குடும்ப அரசியலை நான் முழுவதுமாக எதிர்த்து போராடுவோம் என்று இக்கட்சியின் தலைவர் பேசியுள்ளார். மேலும் உங்களுக்காக நான் இருப்பேன் எனவும் மக்களிடம் கூறியுள்ளார்.

என் மக்களுக்கு உண்ண உணவும், நிரந்தர வேலையும், தங்க வீடும் என முக்கியமான அடிப்படைகள் உள்ளன. அவைக் கண்டிப்பாக கிடைத்தே தீர வேண்டும். இதற்காக நான் குரல் கொடுப்பேன் என்றும் கூறியுள்ளார்.

தவெக – வின் தலைவர் பிளவுவாத அரசியல் மட்டுமின்றி ஊழல் செய்யும் அரசியலுக்கும் முற்றிலும் எதிரியாக நான் செயல்படுவேன் என்று கூறியுள்ளார். மேலும் அரசியல் என்பது பாம்பை போன்றது. சிறு குழந்தை எவ்வாறு பாம்பைக் கண்டு பயம் கொள்ளாமல் இருக்கிறதோ, அதனைப் போல் நான் அரசியலைக் கண்டு பயப்பட போவதில்லை என்றும் கூறியுள்ளார்.

பெரியார் மற்றும் அண்ணாவின் பெயரை சொல்லி குடும்ப அரசியல் செய்து கொண்டிருப்பவர்களை வென்று நாம் நம்முடைய கொள்கை கோட்பாட்டு அரசியலை மேற்கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.