குழந்தையின்மைக்கு இதுவும் காரணமா? வெளியான அதிர்ச்சி தகவல்
நம் தாத்தா பாட்டி காலத்தில், ஒவ்வொரு குடும்பத்திலும், குறைந்தது 10 பிள்ளைகளாவது இருப்பர். இந்நிலை நாம் இருவர் நமக்கு இருவர் என்றாகி, பின், நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற நிலையும் மாறி, தற்போது குழந்தை வரத்திற்காக, ஏங்கி நிற்கும் நிலையில் இருக்கிறோம். ஆயிரம் காரணங்கள் கூறினாலும், சாப்பிடும் உணவு விஷமானது தான் மூல காரணம் என்றால் மறுப்பதற்கில்லை.
குறிப்பாக பெண்கள் மகப்பேறு விஷயத்தில் சந்திக்கும் விஷயங்கள் சொல்லி மாளாது. நீர் கட்டி, ரத்தக் கட்டி, கருக்குழாய் அடைப்பு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இதில் சமீப காலமாக பெண்களை ரொம்பவே அச்சுறுத்தும் ஒரு விஷயம், பிசிஓஎஸ் எனும் (பாலி சிஸ்டிக் ஓவரி சிண்ட்ரம்) சினைப் பை நீர் கட்டி. இதனால் குழந்தைப் பேறு கேள்விக்குறியாகிறது. ’பாலி சிஸ்ட்’ என்றால், நிறைய கட்டிகள் என்று பொருள்.
இப்பிரச்சினை, பெண்கள் பருவமடையும் போதே துவங்கி விடுகிறது. 10 ல் 5 பெண்களுக்கு பிசிஓஎஸ் பிர்ச்சினை உள்ளது. குறிப்பாக, 15 முதல் 44 வயதுள்ள பெண்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றனர். அதிக உடற்பருமன் இந்த பிரச்சினைக்கு, மூல காரணம் என்ற போக்கு நிலவுகிறது.
இந்த பிசிஓஎஸ் பிரச்சினை பெண்களின் சினைப்பையை தாக்குவதால், பெண்களின் மாதவிடாய்க்கு உதவக்கூடிய முக்கிய ஹர்மோன்களான ஈஸ்ட்ரோஜன், புரொஜஸ்டிரான் சுரப்பிலும், கரு முட்டையை உற்பத்தி செய்யக் கூடிய, FSH, LH ஹார்மோனிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஒழுங்கற்ற மாதவிடாய், சீக்கிரமாகவே மாதவிடாய் நாட்கள் முடிவுறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. பிசிஓஎஸ் பிரச்சினையாது, சினைப்பையில் சிறிய அளவில் ஆண்களின் ஹர்மோன்களான ஆண்ட்ரோஜனை சுரக்க வைக்கிறது.
நாளடைவில், பெண்களுக்கான ஹார்மோன் உற்பத்தி குறைந்து, ஆண்களுக்கான ஹார்மோன் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால் பிசிஓஎஸ் உள்ள பெண்களின் முகத்திலும், மார்பிலும் முடி வளர்ச்சி காணப்படுகிறது. இப்பிரச்சினை வருவதற்கான காரணம் இது வரை கண்டுபிடிக்கப்பட வில்லை. எனினும் உணவில் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, இயற்கை உணவுகளுக்கு முக்கியத்துவம் அளித்தல் போன்றவற்றை முறையாக கடைபிடிக்கும் போது, இது போன்ற பிரச்சினைகளைக் களையலாம்.