Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பகுதி நேர விரிவுரையாளர்கள் தொடர்பாக தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு!

அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்பு பயிலகங்களில் காலியாக உள்ள விரிவுரையர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதால் கல்லூரிகளில் பணியாற்றும் அனைத்து பகுதி நேர விரிவுரையாளர்கள் மற்றும் முழுநேர தொகுப்பூதிய விரிவுரையாளர்களை பணியமர்த்த வேண்டாம் என்று அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்களுக்கும் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கான 1060 விரைவறையாளர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாத நிலையில் தொகுப்பூதிய முறையில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களை கணியமறுத்திக் கொள்ள அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி அன்று விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு, தேர்வு நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டனர். சென்ற ஜூலை மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து உத்தேச தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் ஏற்கனவே கல்லூரிகளில் பணியாற்றும் அனைத்து பகுதி நேர விரிவுரையாளர்கள் மற்றும் முழு நேர தொகுப்பு ஊதிய விரிவுரையாளர்களை 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதியில் இருந்து பணியமர்த்த வேண்டாம் என்று தொழில்நுட்ப கல்வி ஆணையர் தெரிவித்துள்ளார்.

அதோடு கல்லூரிகளுக்கு பகுதி நேர விரிவுரையாளர்கள் தேவைப்படுவதாக வைலக முதல்வர்களால் கருதப்படும் பட்சத்தில் ஆணையகம் வெளியிட்ட நெறிமுறைகளை பின்பற்றி சரியான கருத்துருவினை இயக்கத்திற்கு அனுப்புமாறும், ஆணையரின் ஒப்புதல் பெற்ற பிறகு பகுதி நேர விரிவுரையாளர்களை பணியமரத்துமாறும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version