Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்ப்ப கால வாந்தியை கட்டுப்படுத்தும் மாதுளை மனப்பாகு!! பாட்டி சொன்ன வைத்தியம் இது!!

பெண்களின் கர்ப்ப காலத்தில் வாந்தி,குமட்டல் உணர்வு,உடல் சோர்வு போன்றவை இயல்பான ஒரு விஷயம் தான்.இருப்பினும் தொடர் வாந்தி பிரச்சனை இருந்தால் சரியான ஊட்டச்சத்து உணவு எடுத்துக் கொள்வது தடைபடும்.இதனால் தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைக்கும் உரிய ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும்.எனவே கர்ப்ப வாந்தியை கட்டுப்படுத்த மாதுளை,வெல்லம் மற்றும் பட்டை கொண்டு மாதுளை மனப்பாகு தயாரித்து பயன்படுத்தி பலனடையுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)நாட்டு மாதுளை – ஒன்று
2)வெல்லம் – 300 கிராம்
3)இலவங்கப்பட்டை – ஒன்று
4)தண்ணீர் – ஒரு கப்

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் ஒரு பெரிய நாட்டு மாதுளம் பழத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் அதை இரண்டாக நறுக்கி அதன் விதைகளை மட்டும் தனியாக சேகரித்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 02:

பிறகு ஒரு துண்டு இலவங்கப்பட்டை எடுத்து சிறு சிறு துண்டாக உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 03:

அதன் பின்னர் மாதுளம் பழத்தை மிக்சர் ஜாரில் போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.அடுத்து இலவங்கப்பட்டையை போட்டு ஜூஸ் பக்குவத்திற்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 04:

பிறகு ஒரு பாத்திரத்தில் 300 கிராம் அளவிற்கு இடித்து தூளாக்கிய வெல்லத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.இப்பொழுது அரைத்த மாதுளை ஜூஸை அதில் வடிகட்டி கொள்ள வேண்டும்.இதை அடுப்பில் வைத்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 05:

கலவை நன்றாக பாகு பக்குவத்திற்கு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.மிதமான தீயில் மாதுளை மணப்பாகு கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்துவிட வேண்டும்.பிறகு இந்த பாகை ஆறவைத்து வேறொரு பாட்டிலுக்கு வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஸ்டெப் 06:

அதன் பின்னர் பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் அளவு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.இரண்டு நிமிடங்கள் கழித்து தண்ணீரை கிளாஸிற்கு ஊற்றி தயாரித்து வைத்துள்ள மாதுளை மனப்பாகு ஒரு தேக்கரண்டி அளவு அதில் ஊற்றி கலந்து குடித்தால் கர்ப்ப கால வாந்தி பிரச்சனை குணமாகும்.

Exit mobile version