” பொன்மகள் வந்தாள் ” வெளியிடுவதற்கு முன்பே தமிழ்ராக்கர்ஸில் வந்தாள்

0
138

கொரோனா பொதுமுடக்கத்தினால் தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்கள் மூடப்பட்டிருந்த நிலையில் நடிகர் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் ( 2D Entertainment ) தயாரிப்பில் ஜோதிகா நடித்திருந்த பொன்மகள் வந்தாள் திரைப்படம் இன்று நேரடியாக அமேசான் ப்ரைமில் (Amazon Prime ) இன்று ரிலீஸ் ஆகியது.

மே 29ம் தேதியான இன்று மதியம் 12 மணிக்கு படம் அமேசானில் ரிலீஸ் ஆகவிருந்த நிலையில் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் முழு படமும் லீக் செய்யப்பட்டது. அதனால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவெடுத்துள்ளனர்.
பொதுமுடக்கத்தினால் தமிழ் புது படங்கள் எதுவும் வெளிவராமல் உள்ள நிலையில், OTT தளத்தில் வெளியாகவிருந்த முதல் தமிழ் படமும் இப்படி தமிழ்ராக்கர்ஸால் பாதிப்பை சந்தித்துள்ளது அப்பட குழுவினருக்கு கவலையளித்தது.

தியேட்டர்களில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த பொன்மகள் வந்தாள் படம் கொரோனா பாதிப்பினால் வெளியாகாமல் போனது. அதனால் அந்த படத்தை நேரடியாக OTTயில் ரிலீஸ் செய்ய 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் முடிவெடுத்தது. இந்த திடீர் செயலலாலல் தியேட்டர்கள் பாதிக்கப்படும் என தியேட்டர் உரிமையாளர்கள் கடுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இருப்பினும் OTT ரிலீஸில் உறுதியாக இருந்து வந்தார் சூர்யா. இனி சூர்யா – ஜோதிகா தரப்பு படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய மாட்டோம் என்றும் இனி நீங்கள் தயாரிக்கும் மற்றும் நடிக்கும் படங்களை OTTயிலேயே ரிலீஸ் செய்து கொள்ளுங்கள் என தியேட்டர் உரிமையாளார்கள் எச்சரித்ததுள்ளனர்.

2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பொன்மகம் வந்தாள் திரைப்படத்தினை ஜே.ஜெ பிரெட்ரிக் ( J.J Fredic) என்பவர் இயக்கியுள்ளார். தனது திரைப்பயணத்தில் முதல் முறையாக ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். அவருக்கு எதிர்த்தரப்பு வக்கீலாக ஆர். பார்த்திபனும் மேலும் கே.பாக்யராஜ், பாண்டியராஜன், பிரதாப் போன்ற பல பிரபல நடிகர்களும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.

இப்படத்தினை அமேசான் ப்ரைமில் ( Amazon Prime ) பார்த்துவிட்டு படம் மனதை உருக்கும் உணர்வுகள் நிறைந்த படம் என பலரும் சமூக வலைதளங்களில் படத்தினை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

பெரிய வியாபார நோக்கில் பார்க்காமல், பொதுமுடக்கத்தில், வீடுகளில் முடங்கியிருக்கும் மக்களிடம் படத்தினை சேர்த்திருப்பது வரவேற்கத்தக்கது என பலரால் பாராட்டப்படுகிறது.