Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

குடும்ப அட்டைகளுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும். – முதல்வர் அறிவிப்பு

குடும்ப அட்டைகளுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும். – முதல்வர் அறிவிப்பு

புதுவையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட காரணத்தால் பல்வேறு தொழிலைச் சார்ந்த வாழும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவன ஊழியர்கள், அமைப்புசாரா பணியாளர்கள், மீனவர்கள், சில்லறை வியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள் மற்றும் தினக்கூலி செய்பவர்கள் போன்ற பல்வேறு தரப்பில் வருமானத்தை ஈட்டிவந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மிகவும் பாதிக்கக் கூடும் ஆகவே அவர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு புதுவை எம்எல்ஏ -க்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து, கொரோனோ தடுப்பு நடவடிக்கை, முன்னெச்சரிக்கை, ஊரடங்கு உத்தரவு நிவாரணம் வழங்குவது குறித்து அனைத்து அரசியல் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனையில் புதுவை மாநிலத்தின் குடும்ப அட்டைகளுக்கு தலா ரூ.2000 வழங்க இருப்பதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்பான இந்த அறிவிப்பு அம்மாநில மக்களிடையே சற்று ஆறுதல், மகிழ்ச்சி உண்டாக்கியுள்ளது. மேலும், புதுவையில் ஊரடங்கு உத்தரவு அதிரடியாக அமலில் உள்ள காரணத்தால், உத்தரவை மீறி வெளியே யார் நடமாடினாலும் அவர்களுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிப்பதாகவும் புதுச்சேரி அரசு கடுமையாக எச்சரித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அடுத்த 21 நாட்களுக்கு தொடரும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு அறிவித்தார். இந்நிலையில், நேற்றிரவு 12 மணிமுதல் அடுத்த 21 நாட்களுக்கு மக்கள் தங்களை வீட்டில் முடக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, சைனா, இத்தாலி போன்ற முன்னேறிய நாடுகளே கொரோனா பாதிப்பினால் பலாயிரம் உயிரிழப்பையும், தொடர் அச்சத்தையும் சந்தித்து வருவதால் இந்தியா போன்ற வளரும் நாடுகள் தங்களின் பாதுகாப்பை கருதி கொரோனா மேலும் பரவாமல் இருக்க தங்களை முழுமையாக முடக்கிக் கொள்வதில் தவறில்லை என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.

Exit mobile version