Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஷ வண்டு தாக்கி புதுவை முன்னாள் எம்எல்ஏ மரணம் தமிழக முதலமைச்சர் இரங்கல்

விஷ வண்டு தாக்கி புதுவை முன்னாள் எம்எல்ஏ மரணம் தமிழக முதலமைச்சர் இரங்கல்

புதுச்சேரி மாநில அதிமுகவின் முன்னாள் மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய புருஷோத்தம்மன் விஷவண்டு தாக்கி உயிரிழந்தார், புதுச்சேரி சட்டமன்றத்தில் இரண்டு முறை மணவெளி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார்,. மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி,

புதுச்சேரி அதிமுகவில் மாநில துணைச் செயலாளர், மாநில புறநகர் செயலாளர், விவசாயப் பிரிவுச் செயலாளர் போன்ற பல பதவிகளை வகித்தவர்,. அவர் தனக்கு சொந்தமான புதுவை திருக்கனூர் பக்கத்தில் உள்ள தமிழக பகுதியான விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் ராதாபுரத்தில் தனது விவசாய நிலத்தில் நடைபெற்ற பணிகளை பார்த்து கொண்டிருக்கும்போது விஷவண்டு கொட்டியதில் சம்பவ இடத்திலே மயங்கி விழுந்துள்ளார்,.

உடனடியாக அங்குள்ளவர்கள் அவரை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்,. ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், உடனடியாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது,.

நாளை அவரது இறுதிச்சடங்கு புதுச்சேரியில் நடக்கும் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். புருஷோத்தமன் மரணத்திற்கு தமிழுக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இருவரும் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

Exit mobile version