நாளை காணும் பொங்கல் கொண்டாட்டம்! மெரினா கடற்கரையில் பாதுகாப்பு பணி தீவிரம்!
பொங்கல் பண்டிகை கோலாகலமாக நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.இன்று மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.அதனால் அனைவருக்கும் பொங்கல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.பொங்கல் விடுமுறையை கொண்டாடும் விதமாக சுற்றுலா தலங்களில் மக்கள் திரண்டு வருகின்றனர்.மாட்டுப்பொங்கலை தொடர்ந்து நாளை காணும் பொங்கல் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர்.மேலும் ஆண்டுதோறும் காணும் பொங்கல் அன்று சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு மக்கள் வருவது வழக்கம் தான்.
அதனால் நாளை சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடற்கரை,பூங்காக்கள் போன்ற இடங்களில் காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்காக மக்கள் காலை நேரத்தில் அதிகளவு வருவது வழக்கம் தான்.இருப்பினும் மாலை நேரத்தில் அளவில்லாத கூட்டம் ஏற்படும்.அந்தவகையில் சென்னை மெரினா கடற்கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள்,மேலும் மாநகராட்சி பூங்காக்கள் மற்றும் கிண்டி,சிறுவர் பூங்கா,வண்டலூர் உயிரியல் பூங்கா போன்ற இடங்களில் மக்கள் கூட்டம் அதிகளவில் தான் இருக்கும்.
அதன் காரணமாக நாளை மெரினாவில் பொதுமக்கள் கடலில் இறங்கவும்,குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.கடற்கரையில் மக்கள் கால் நனைக்கும் பகுதிகள் முழுவதும் சவுக்கு மர கட்டைகளை கட்டி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மெரினாவில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தடையை மீறினால் அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.மெரினா 15 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது.கூட்ட நெரிசல் அதிகம் இருப்பதால் குழந்தைகள் காணாமல் போகும் நிலை உள்ளது அதனால் அவர்களை உடனடியாக மீட்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.மெரினா கடற்கரை முழுவதும் டிரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது.