பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்து இயக்கம்! எந்த தேதியில் இருந்து தெரியுமா?
பொங்கல் பண்டிகை என்பது தமிழர்களுக்கே உரிய பண்டிகையாக உள்ளது.இந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் மக்கள் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதன் காரணமாக ஆம்னி பேருந்தின் கட்டணம் மூன்று மடங்காக உயர்ந்தது.தீபாவளி பண்டிகையன்று ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதனால் வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வரும் மக்கள் அதிகளவு கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் நில உருவாகி உள்ளது.பொங்கல் பண்டிகை என்றாலே அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம் தான்.அதன் அடிப்படையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்குவது குறித்து நேற்று அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
அந்த கூட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மொத்தம் 16932 சிறப்பு பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை வரும் 15 ஆம் தேதி கொண்டாடுவதினால் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை சென்னையில் வழக்கமாக இயக்கப்படும் 6,300 பேருந்துக்களுடன் சேர்த்து கூடுதலாக 4449பேருந்துகள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆம்னி பேருந்தில் அதிக கட்டணம் வசூல் செய்தால் 044 2474 9002, 044 2628 0445, என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.