பொங்கல் பரிசுத் திட்டம்! முடிவை மாற்றிக் கொண்ட தமிழக அரசு?

0
151

சென்ற அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு ஏதுவாக பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு, சர்க்கரை, பச்சரிசி, முந்திரி, உள்ளிட்ட பொருட்களுடன் சேர்த்து 2500 ரூபாய் ரொக்கமும் வழங்கப்பட்டிருந்தது.

இதனால் ஏழை, எளிய, மக்கள் மகிழ்ச்சியுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்கள். அதோடு மாநில அரசையும் வெகுவாக பாராட்டி இருந்தார்கள்.

அதேசமயம் பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்ட 2,500 ரூபாய் பணம் அதிமுக மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் வருடம் தோறும் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

ஆனாலும் சமீபத்தில் நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்று இருக்கின்ற சூழ்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு கரும்பு, சக்கரை, பச்சரிசி, உள்ளிட்ட 14 வகையான பொருட்களை மட்டும் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் ரொக்கம் தொடர்பாக எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

ஆனால் தமிழக அரசின் இந்த அறிவிப்பு பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழ்நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் சேர்த்து வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது. தமிழக முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கொண்டாடப்படும் முதல் பொங்கல் பண்டிகை என்ற காரணத்தால், சிறப்பு தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளிவரலாம் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.