ஈரோடு: கடந்த மாதம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மூச்சி திணறல் காரணமாக அனுமதிக்கப்ட்டார். மேலும் ஒரு மாதம் காலம் மருத்துவமனையில் தங்கி இருந்த நிலையில் அவர் கடந்த மாதம் காலமானார். இந்த நிலையில் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி காலியானாதாக அறிவிக்கப்பட்டது.
அதனை அடுத்து அடுத்த மாதம் அதாவது பிப்ரவரி மாதம் 5-ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைப்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வரும் 10-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வருகிற 13-ஆம் தேதி வரை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் மட்டும் இந்த தொகுப்புக்கு டோக்கன் வழங்கப்பட்ட நிலையிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டவில்லை.
அதற்க்கு காரணம் தற்போது இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு வந்த நிலையில் மேல் இடத்தில் அனுமதி பெற்று தர முடியும் என நோட்டிஸ் ஓட்டப்பட்டு இருந்தது. மேலும் இந்த தொகுதியில் மொத்தம் 100 மேற்ப்பட்ட நியாவிலை கடைகள் உள்ளது. அதில் 50 ஆயிரம் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளனர். மேலும் அனுமதி வந்த உடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.