Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழக அரசு அறிவித்திருக்கும் பொங்கல் பரிசு பொதுமக்களை வந்து சேருமா? ஆப்பு வைக்க பார்க்கும் திமுக!

பொங்கல் பரிசு தொகையாக தமிழக அரசு அறிவித்திருக்கும் திட்டத்தை அதிமுகவினர் மூலமாக விநியோகம் செய்வதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக மனு ஒன்றை தாக்கல் செய்து இருக்கின்றது.

எதிர்வரும் 2021 ஆம் வருடம் பொங்கல் பண்டிகையை ஒட்டி பரிசுத் தொகையுடன் கூடிய 2500 ரூபாய் பணம் உள்ளிட்டவை வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இதற்கான டோக்கன் வழங்கும் பணியானது மிகத் தீவிரமாக நடந்து வருகின்றது. ஆனாலும் பொங்கல் பரிசு தொகை நியாய விலை கடை ஊழியர்கள் விநியோகம் செய்யாமல் அதிமுகவினர் விநியோகம் செய்து வருவதாக திமுக புகார் தெரிவித்தது .

இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசுக்கான டோக்கன்களை ஆளும் தரப்பினர் வழங்கக்கூடாது. எனவும் அரசு ஊழியர்களை கொண்டு பொங்கல்பரிசு டோக்கன்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்திட வேண்டும். எனவும் திமுகவின் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில், பொங்கல் பரிசு தொகையான ரூபாய் 2500 மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு கான பக்கங்களை ஆளும் தரப்பினர் விநியோகம் செய்வதை எதிர்த்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது, 2500 ரூபாய் பொங்கல் பரிசு காண டோக்கன்களை ஆளும் தரப்பினர் கொடுத்து வருகிறார்கள். இது சட்டப்படி தவறாகும் அதிமுகவினர் டோக்கன்களை வழங்குவதால் உண்மையான பொதுமக்களுக்கு பரிசு தொகை போய் சேராது. ஆகவே பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் மூலமாக மட்டுமே வழங்கிட வேண்டும். எனவும் அந்த நோக்கங்களில் அதிமுகவின் தலைவர்கள் புகைப்படங்களை தடை செய்ய வேண்டும். எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.

Exit mobile version