‘புது வருடம் பிறக்க இருக்கும் நிலையில் அடுத்த கொண்டாட்டமாக பொங்கல் வரவிருக்கிறது. பொங்கல் என்றாலே, ஒரே சந்தோசம் தான். ஏனென்றால், அப்போது தான் நீண்ட விடுமுறை நாட்கள் கிடைக்கும். கிராமங்களில் வீர விளையாட்டுகளும் நம் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு நடைபெறும். தமிழகமே பரபரப்பாக இந்த திருநாளை கொண்டாடும். ஒரு மாதத்திற்கு முன்பாகவே விடுமுறை நாட்களைக் கணித்து டூர் பிளான் செய்து கொண்டிருப்பவர்கள் உத்தியோகஸ்தர்கள்’..
” பிறக்கவிருக்கும் புது வருடத்தில், வரும் ‘பொங்கல் பண்டிகையானது ஜனவரி 14 செவ்வாய்க்கிழமை வருகிறது’. இதற்கு முன்னதாக சனி, ஞாயிறு இரு நாள் விடுமுறை. மேலும் ஜனவரி 13 ‘ஆருத்ரா தரிசனம்’ என்பதால் ராமநாதபுரம் மாவட்ட பள்ளி கல்லூரிகள் லோக்கல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து பொங்கல் விடுமுறையுடன், ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் ஆறு நாட்கள் அதிரடியான விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் ஆருத்ரா தரிசனத்திற்காக பலரும் அக்கோயிலுக்கு படையெடுத்து திரள்வர்”. அதனாலயே, அங்குள்ள ‘பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு லோக்கல் விடுமுறை எப்போதும் அறிவிக்கப்படும்’. இந்த வருடம் அது ‘திங்கள் கிழமை வருவதால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக ஆறு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாவட்ட பள்ளி குழந்தைகள் முதல் அலுவலக ஊழியர்கள் வரை மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர்’.