“தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு எப்போது பொங்கல் பரிசு வழங்கும்? என்னென்ன பொருட்கள் தரும்?” என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் தற்போது பேசு பொருளாக உள்ளது. கடந்த சில வருடங்களாக அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு என்பது வழங்கப்படும்.
கடந்த வருடம் பொங்கல் தொகுப்பில், பச்சரிசி, கரும்பு, சக்கரை இத்துடன் ஆயிரம் ரூபாயும் சேர்த்து வழங்கப்பட்டது. இந்த ஆண்டு எப்போது வழங்கப்படும்? போன வருட தொகுப்பில் இருந்த பொருட்களை தவிர வேறு எதுவும் மாற்றம் உள்ளதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் சோளிங்கநல்லூரில் உள்ள தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கூட்டுறவு உணவு மற்றும் பாதுகாப்புத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சி முடிந்தபின் செய்தியாளர் சந்திப்பு ஏற்பட்டது.
அதில் செய்தியாளர்கள் பொங்கல் தொகுப்பு குறித்து மக்கள் பேசி வருகின்றனர் என வினாவினார்? அதற்கு அவர், முதல்வர் வழங்கக்கூடிய பொங்கல் தொகுப்பை வரும் வாரத்தில் முதல்வர் அறிவிப்பார்! என்றார். முதல்வர் அறிவிக்கும் முன் நாங்கள் பொங்கல் தொகுப்பை பற்றி வெளியிடக் கூடாது என்றார். மேலும், முதல்வர் கூறியது போன்று, பொங்கல் தொகுப்பிற்கான வேலை திறம்பட செயல்படுகிறது. கரும்பு கொள்முதல் குறித்து வேளாண் துறையுடன் கலந்து ஆலோசித்து உள்ளோம். மேலும், தொகுப்பில் கூடுதல் பொருட்கள் குறித்து, கொள்முதல் ரீதியான முடிவில் தான் உள்ளது. இப்போது டிசம்பர் இருபதுக்கு மேல் ஆகிறது வரும் வாரத்தில் முதல்வர் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்றார்.
பொங்கல் வருகின்ற வேளையில் பல ரேஷன் கடைகளில் பச்சரிசி தட்டுப்பாடு உள்ளதே? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார். ‘ரேஷன் கடைகளில் அரிசி,பருப்பு ஆகியவை எல்லாம் இரண்டு மூன்று மாதங்களுக்கு தேவையான இருப்பு உள்ளது. புழுங்கல் அரிசியே ரேஷன் கடைகளில் கேட்கப்படுகிறது. பச்சரிசி 30 சதவீதம் வழங்கப்படுகிறது’. பச்சரிசி எந்தெந்த இடத்தில் கேட்கிறார்களோ, அங்கு வழங்க நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார்.
முதல்வர் கூறுவது போன்று உணவு கொள்முதல் மேலும் பாதுகாப்பு ஆகியவை இரண்டும் மிக முக்கியம். கூட்டுறவு மற்றும் உணவு இரண்டும் எனது இரு கண்கள். உணவு பாதுகாப்பு துறையில் ஸ்பெஷல் பிடிஎஸ் என்பது தமிழ்நாட்டில் மட்டும்தான் உள்ளது என உணவு பாதுகாப்பு துறை பெருமையை பேசியுள்ளார். அமைச்சர் சேகர்பாபு பேசுகையில் கஜானா காலியாக உள்ளதால், ‘மகளிர் உரிமைத்தொகை வழங்குவதற்கே சிரமமாக உள்ளது. இதில் எங்கிருந்து பொங்கல் தொகுப்பு கொடுப்பார்கள்?’ எனக்கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.