Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொங்கல் பரிசு தொகை! டோக்கன் வினியோகம் தொடங்கியது!

பொங்கல் பரிசுத் தொகை ரூபாய் 2500 மற்றும் பொங்கல் தொகுப்பு வாங்குவதற்காக டோக்கன் விநியோகமானது இன்றைய தினம் முதல் ஆரம்பமாகி இருக்கின்றது. பொங்கல் தினத்தை முன்னிட்டு அதை சிறப்பாக கொண்டாடும் வகையில், எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் குடும்பம் ஒன்றுக்கு 2,500 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி மாதம் நான்காம் தேதி முதல் வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருக்கிறார். இதனை செயல்படுத்தும் வகையில், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, ஆணையர், மற்றும் அவர்கள் வழங்கிய இருக்கும் உத்தரவில், பொங்கல் பரிசு சுழற்சிமுறையில் வழங்கப்பட வேண்டும். ஒரு நாளைக்கு 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு அனுமதி அளிக்கப் படுகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.

காலையில் 100 ரேஷன் கார்டுகளுக்கும் அதன் பிறகு மதியம் 100 ரேஷன் கார்டுகளுக்கும் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு இருக்கின்றது. பரிசுப் பொருட்களை வழங்கும் நாள் ,நேரம், போன்றவற்றை குறிப்பிடும் வகையில், வரும் 26-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வீடுதோறும் சென்று நியாய விலை கடை பணியாளர்கள் மூலமாக டோக்கன் விநியோகிக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட நாளில் பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுதாரர்களுக்கு 13 1 2021 அன்று வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் இன்று முதல் வரும் 31-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட இருக்கின்றது. டோக்கன்களை டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை வீடு தேடி சென்று ரேஷன் கடை பணியாளர்கள் வழங்க இருக்கிறார்கள். பொங்கல் பரிசு தொகுப்பில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ, சர்க்கரை ஒரு முழுக் கரும்பு 120 கிராம் முந்திரி 20 கிராம் திராட்சை 50 கிராம் ஏலக்காய் போன்றவை கொடுக்கப்படும். அதே சமயத்தில் 2500 ரூபாய் பணமும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version