DMK BJP: தமிழக அரசு பொங்கல் பரிசு தொகையாக பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 2௦௦௦ வழங்குமாறு பாஜக சார்பாக வழக்கு போடப்பட்டுள்ளது.
தமிழகத் திருநாள் பொங்கல் பண்டிகையையொட்டி வருடம் தோறும் தமிழக அரசின் இலவச வேஷ்டி சேலை பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் கரும்பு பரிசுத்தொகை உள்ளிட்டவற்றை வழங்குவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பெஞ்சால் புயலை காரணம் காட்டி நிதி நெருக்கடி சுமை அதிகமாக உள்ளது பரிசுத் தொகை வழங்குவது குறித்து ஆலோசனை செய்வதாக அமைச்சர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து தமிழக அரசு சார்பாக 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியானது. மேற்கொண்டு இது வாங்குவதற்கான டோக்கன்கள் இன்று வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனிடையே பாஜக வழக்கறிஞர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடுத்துள்ளார்.
அதில், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களுக்கு பொங்கல் தொகுப்புடன் பரிசுத்தொகை வழங்குகின்றனர். தற்சமயம் இது குறித்து விளக்கம் கூட அளிப்பதில்லை. மேற்கொண்டு பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் கையோடு 2000 ரூபாய் பரிசுத் தொகையை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கானது தற்பொழுது வரை விசாரணைக்கு வரவில்லை. மேற்கொண்டு அமர்வுக்கு வரும் பட்சத்தில் இது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும். பெஞ்சால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ 2000 வழங்குவதென்பது சந்தேகம் தான் என கூறுகின்றனர்.