Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொங்கல் தினத்தன்று நேரடியாக தொலைக்காட்சியில் வெளியாகும் படம்!

தேவராட்டம் திரைப்படத்தை அடுத்து இயக்குனர் முத்தையா இயக்கி வரும் திரைப்படத்தில் கதாநாயகனாக விக்ரம் பிரபு நடித்து இருக்கின்றார். இந்த திரைப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வந்து கொண்டிருக்கின்றன. படத்தை நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிடும் நோக்கில் இந்த திரைப்படத்தை உருவாக்கினார்கள். பொங்கலுக்கு நேரடியாக சன்டிவியில் ரிலீஸ் செய்துவிட்டு அடுத்த நாள் சன் நெக்ஸ்ட் செயலியில் வெளியிட திட்டமிட்டு இருந்தார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இப்பொழுது தியேட்டர்கள் திறக்கப்பட்ட காரணத்தால், தியேட்டர்களில் ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி வெளியிட்டுவிட்டு அதன்பின்பு சன் டிவியில் வெளியிடலாம் என்று யோசித்து வருகிறார்கள். இதில் ஒரு சிக்கல் இருக்கின்றது. எதிர்பார்த்த நாளுக்குள் திரைப்படம் முடியாது. என தெரிவிக்கப்படுகின்றது. அதன் காரணமாக, திரையரங்குகளில் வெளியிடுவது சாத்தியம் கிடையாது. திரைப்படத்தை ஜனவரி 1-ஆம் தேதிக்கு வெளியிட வேண்டுமென்றால், இப்பொழுது சென்சார் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அதோடு விளம்பரத்தையும் ஆரம்பித்திருக்க வேண்டும் எனவே இரண்டுமே இதுவரை நடைபெறவில்லை.

தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம், முதலில் திட்டமிட்டபடி நேரடியாக தொலைக்காட்சியில் வெளியிட்டு விடலாம். என்று நினைக்கிறார்கள். பொங்கல் தின சிறப்பு திரைப்படமாக வெளியிட்டு விடலாம். என்று சன்பிக்சர்ஸ் முடிவு செய்து இருக்கிறது. இந்த திரைப்படத்திற்கு முதலில் பேச்சி என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள். அந்த தலைப்பானது தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தால், இந்த திரைப்படத்தின் தலைப்பை புலிக்குட்டி பாண்டி என்று மாற்றியிருக்கிறார்கள்.

விக்ரம் பிரபுவிற்கு இந்த திரைப்படத்தில் ஜோடியாக லட்சுமிமேனன் நடித்து இருக்கின்றார். படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இருக்கின்றார் .திரைப்படத்தின் படப்பிடிப்பானது திண்டுக்கல், மதுரை, போன்ற இடங்களில் நடந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version