பொங்கல் வேட்டி,சேலை வழங்கும் திட்டம்! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 1,680 மேற்ப்பட்ட மெட்ரிக் டன் பருத்தி நூல் வாங்க தமிழக அரசு டெண்டர் அறிவித்துள்ளது. டெண்டருக்கு செப்டம்பர் 9-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் வேட்டி, சேலை திட்டத்திற்கு டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வழங்கப்படும் வேட்டி, சேலை திட்டத்தால் பலர் பயனடைகின்றனர்.
1.80 கோடி பெண்கள், 1.80 கோடி ஆண்களுக்கு வேட்டி, சேலை வழங்குவதற்கான டெண்டருக்கு செப்டம்பர் 9-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து டெண்டர் அறிவிப்பால் தைத்தறி நெசவாளர்களில் 15 ஆயிரம் பேரும், விசைத்தறி நெசவாளர்களில் 54 ஆயிரம் பேரும் பலன் அடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.