Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி!

#image_title

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி!

பொன்முடிக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க முடியாது முதல்வருக்கு பதில் கடிதம் அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி!

வருமானத்திற்க்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வருமான வரித்துறையினர் வழக்கு பதிவு செய்து பொன்முடியினை கைது செய்தனர்.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதனால் பொன்முடி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் அளிக்கப்பட்ட மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை நிறுத்தி வைத்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் கோவிலூர் தகுதி காலியானதாக அறிவித்ததை சட்டப்பேரவை செயலகம் ரத்து செய்தது.

எனவே,பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ ஆனார், அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கோரி முதல்வர் மு.க ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அண்மையில், பொன்முடியின் பதவி பிரமாணம் குறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞரிடம் ஆலோசிக்க பயணமாக டெல்லி சென்றிருந்தார்.

வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் நடக்கயிருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலுடன் விளவங்காடு இடைத்தேர்தலும் நடக்கயிருகின்ற நிலையில் திருகோவிலூர் தொகுதிக்கு இடைத்தேர்தல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த நிலையில், பொன்முடி தொடர்பான வழக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டு அவரை இன்னும் உச்சநீதிமன்றம் விடுவிக்கவில்லை எனவே பொன்முடியை மீண்டும் அமைச்சராக நியமிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.

Exit mobile version