Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இவங்களால தமிழ்நாட்டுக்குள்ள வரவே முடியாது! பொன்னையன் பரபரப்புப் பேச்சு!

பாஜக தமிழ்நாட்டில் எப்போதுமே ஆட்சிக்கு வரமுடியாது என்று அதிமுகவின் மூத்த நிர்வாகி பொன்னையன் விமர்சனம் செய்து இருக்கின்றார்.

தமிழக திட்டக் குழு துணைத் தலைவரும் அதிமுக மூத்த தலைவருமான பொன்னையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து இருக்கின்றார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்னையன் தமிழ்நாடு திட்டக்குழுவின் பெயர் வளர்ச்சிக்குழு என்று மாற்றி அமைக்கப்பட்டு இருக்கின்றது. விவசாயத்துக்கு முக்கியத்துவம் அளிப்பதே இந்த குழுவின் தலையாய கடமை என்று தெரிவித்தார்.

தொடர்ச்சியாக பேசிய அவர் தொழில் முறையை ஊக்குவிப்பது போல விவசாயத்திற்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருவதில்லை, மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் ஜிஎஸ்டி மூலமாக தமிழகத்திற்கு எந்த ஒரு பயனும் கிடையாது.

இங்கே எப்போதும் ஆட்சிக்கு வர முடியாத ஒரு கட்சியாக பாஜக இருக்கின்றது. அதன் காரணமாகவே தான் அனைத்தையும் கேட்டுப் பெற வேண்டிய நிலையில் இருக்கிறது தமிழகம் என்றார் பொன்னையன்.

சட்டசபை தேர்தலில் பாஜக, மற்றும் அதிமுக கூட்டணி தொடரும், என்று தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்திருக்கின்றார்.

அதேபோல அதிமுகவின் கூட்டணி கட்சிகள் நண்பர்களாகவே இருக்கிறார்கள், என்று அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்திருக்கின்றார்.

இருந்தாலும் கடந்த சில மாதங்களாகவே அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் பல சிக்கலான கருத்துக்கள் நிலவி வருகிறது.

பாஜக கைகாட்டும் கட்சியை ஆட்சியில் அமரும் என்று எல் முருகன் தெரிவித்திருக்கும் நிலையில், கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை என்று அதிமுக அமைச்சர்கள் திட்டவட்டமாக கூறி வருகிறார்கள். இந்த சூழலில் அதிமுகவின் பொன்னையன் பாஜக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.

Exit mobile version