Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட உள்ளது இவர்தான்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தெலுங்கில் வெளியிட உள்ளது இவர்தான்… வெளியான லேட்டஸ்ட் தகவல்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வியாபாரங்கள் இப்போது தொடங்கியுள்ளன.

இயக்குனர் மணிரதனத்தின் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து வருகின்றனர். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படத்தின் முதல்பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. தமிழில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுவதும் பேன் இந்தியா ரிலீஸாக 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

இதையடுத்து படத்தின் பிஸ்னஸ் தற்போது தொடங்கியுள்ளது. படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இயக்குனர் மணிரத்னம் அதை விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது. ஏனென்றால் படத்தை அவர் விற்றுவிடும் முடிவில் இருக்கிறாராம். ஆனால் ரெட் ஜெயண்ட் நிறுவனமோ டிஸ்ட்ரிபுயூஷன் முறையில் மட்டுமே படங்களை வாங்குகிறது. இதனால் மணிரத்னம் ரிலீஸுக்கு  முன்பே லாபம் பார்க்கவேண்டும் என ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது.அதே போல தெலுங்கில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை விஜய்யின் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட உள்ளதாக சொல்லப்படுகிறது.

பொன்னியின் செல்வன்  படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Exit mobile version