Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சென்னையின் பிரபல மாலில் பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் ரிலீஸ்… கார்த்தி வெளியிட்ட அப்டேட்!

சென்னையின் பிரபல மாலில் பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் ரிலீஸ்… கார்த்தி வெளியிட்ட அப்டேட்!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள முதல் சிங்கிள் பாடல் இன்று வெளியாக உள்ளது.

இயக்குனர் மணிரத்னம் தன்னுடைய 30 ஆண்டுகால கனவுப் கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது.

இதையடுத்து படத்தில் இடம்பெற்றுள்ள ‘பொன்னி நதி’ எனும் பாடல் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சென்னையின் பிரபல மால்களில் ஒன்றான எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் 6 மணிக்கு இந்த பாடல் வெளியீடு நடக்கும் என நடிகர் கார்த்தி அறிவித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் பயணம் தொடங்கும் இடத்தில் ஆரம்பமாகும் பாடலாக இந்த பாடல் இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுத, ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து பாடியுள்ளார். ரஹ்மான் இசைக் கச்சேரிக்காக அமெரிக்கா சென்றுள்ளதால் இன்று நடக்கும் பாடல் வெளியீட்டில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என தெரிகிறது.

Exit mobile version