IMAX தொழில்நுட்பத்தில் வெளியாகும் முதல்படமாக பொன்னியின் செல்வன்
அகண்ட திரை தொழில்நுட்பமான ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பொன்னியின் செல்வன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக நிறைவடைந்து விட்டது. செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் -1 ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.
இந்நிலையில் இந்த படம் மிக பிரம்மாண்டமாக இந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகும் நிலையில் படத்துக்கான ப்ரமோஷன்களை அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து ஒரு மாதம் திட்டமிட்டுள்ளார்களாம். இதற்காக படத்தில் நடித்த நடிகர் நடிகைகள் அனைவரிடமும் ஒரு மாதம் தேதிகள் வாங்கி லாக் செய்து வைத்துள்ளார்களாம். இதனால் இந்தியா முழுவதும் அடுத்த ஒரு மாதத்துக்கு பொன்னியின் செல்வன் ப்ரமோஷன் பணிகள் நடக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் முதல் முதலில் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தோடு ரிலீஸ் ஆகும் திரைப்படமாக பொன்னியின் செல்வன் வெளியாக உள்ளது.