Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஜினி & கமல் கலந்துகொள்ளும் பொன்னியின் செல்வன் இசை வெளியீடு… எப்போது?

ரஜினி & கமல் கலந்துகொள்ளும் பொன்னியின் செல்வன் இசை வெளியீடு… எப்போது?

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் மாதம் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தமிழ் சினிமாவின் முனன்ணி இயக்குனரான மணிரத்னம் தன்னுடைய கனவுப் கனவுப் படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தற்போது இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தில் இந்திய சினிமாவின் பிரபல நடிகர் பட்டாளமே இணைந்துள்ளது. முக்கிய கதாபாத்திரங்களாக விக்ரம்(ஆதித்த கரிகாலன்), கார்த்தி(வந்தியத்தேவன்), ஐஸ்வர்யா ராய்(நந்தினி), திரிஷா(குந்தவை), ஜெயம் ரவி(அருள்மொழி வர்மன்), விக்ரம் பிரபு (சேந்தன் அமுதன்), சரத்குமார் (பழுவேட்டரையர்), பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தோட்டாதரணி கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பே முழுவதுமாக நிறைவடைந்து விட்டது. செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி பொன்னியின் செல்வன் -1 ரிலீஸ் ஆக உள்ளது. இதையடுத்து சில தினங்களுக்கு முன்னர் படத்தின் டீசர் மற்றும் முதல் சிங்கிள் பாடல் ஆகியவை வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி சென்னையில் நடக்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிகழ்வில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக இயக்குனர் மணிரத்னம் இருவரையும் தனிப்பட்ட முறையில் அழைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version