Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பூஜா ஹெக்டே ட்விட்டரில் போட்ட பதிவு! குஷியான விஜய் ரசிகர்கள்!

 

தளபதி 65 என்று சொல்லப்படும் பீஸ்ட் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ள நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே ட்விட்டரில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அந்த பதிவை பார்த்து தளபதி ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் தளபதி 65 என்ற திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவரது பிறந்த நாளை ஒட்டி ” தளபதி 65″ திரைப்படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆனது.


இது தளபதி நடிக்கும் 65வது படம் என்பதால் தளபதி 65 என பெயரிடப்பட்டுள்ளது. இதை இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சமீபத்தில்தான் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் முடிவடைந்தது என்பது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு அமலில் இருக்கும் நேரத்தில் படப்பிடிப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், இப்பொழுது படப்பிடிப்புக்கு அனுமதி அளித்தவுடன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

june 21ஆம் தேதி தளபதி விஜய் தனது 47வது பிறந்தநாளைக்  அன்றைய தினத்திலேயே தளபதி 65 படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பலரின் வரவேற்பை பெற்றது.

ட்விட்டர் பக்கத்தில் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட “செஞ்சிட்டா போச்சு” என்ற விஜய்யின் குரலில் அனிருத் இசையில் அதிரடி ஆகவே இருந்தது. மாஸ்க்கு பெயர் போனவர் தளபதி. இந்த பீஜியம் உடன் கூடிய இந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களை வெறித்தனமாகக் அதிர வைத்திருக்கிறது என்றே கூறலாம்.

ஜீன் 21 ஆம் தேதி 6 மணிக்கு தளபதி 65 ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. கையில் துப்பாக்கியுடன் அவர் நிற்கும் சாயலை பார்த்தாலே படத்தில் ஏதோ சம்பவம் இருக்கு என்பது போல் உள்ளது. படம் பெயர் பீஸ்ட் ( Beast) என வெளியானது.

இந்நிலையில் ஊரடங்கு பல தளர்வுகள் கொடுக்கப்பட்ட நிலையில் படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன. தனது ட்விட்டர் பக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் பீஸ்ட் திரைப்படத்தின் பாடலுக்கு நடன ஒத்திகை நடைபெறுவதாக கூறியுள்ளார்.

அதைப் பார்த்த தளபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து வருகின்றனர்.

Exit mobile version