Poonai Meesai: பூனை மீசையில் டீ போட்டு குடித்தால் சிறுநீரக கல் சுகர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்!!
நம் உடலிற்கு நன்மை தரக் கூடிய மூலிகைகளில் ஒன்று பூனை மீசை.இந்த மூலிகை செடியின் பூக்கள் பூனை மீசை போன்று இருக்கும்.அது மட்டுமின்றி இதன் இலைகள் துளசியை ஒத்திருக்கும்.இதனால் இவை பூனை மீசை துளசி என்று அழைக்கப்படுகிறது.இந்த மூலிகை இரத்த அழுத்தம்,காக்காய் வலிப்பு,பித்தப்பை கற்கள்,கல்லீரல் அலர்ஜி உள்ளிட்ட பல வியாதிகளை குணமாக்க உதவுகிறது.
பூனை மீசை டீ தயாரிக்கும் முறை:
தேவையான பொருட்கள்:-
பூனை மீசை பொடி – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1 கிளாஸ்
செய்முறை:-
அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பின்னர் அதில் ஒரு தேக்கரண்டி பூனை மீசை பொடி சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இந்த நீரை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் உடலில் உள்ள பல வியாதிகள் குணமாகும்.
பூனை மீசை ஆரோக்கிய பயன்கள்:
1)இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
2)உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை பிட்டாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
3)சிறுநீரகத்தில் உள்ள கற்களை கரைக்க உதவுகிறது.பூனை மீசை டீ குடித்து வந்தால் சிறுநீரகத்தில் உள்ள தொற்றுக் கிருமிகள் சிறுநீர் மூலம் வெளியேறி விடும்.
4)பெண்களுக்கு ஏற்படும் முறையற்ற மாதவிடாயை சீர் செய்ய பூனை மீசை டீ குடித்து வரலாம்.
5)தீராத காய்ச்சல் குணமாக பூனை மீசை பொடியில் கசாயம் செய்து குடித்து வரலாம்.உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் தினமும் ஒரு கிளாஸ் பூனை மீசை டீ குடித்து வருவது நல்லது.