தரமற்ற ரேஷன் அரிசி…மத்திய அமைச்சர்கள் வருகை!! அலறவிடும் தமிழக அரசு!!

0
141
Poor quality ration rice... Union Ministers visit!! Screaming Tamil Nadu Government!!

தரமற்ற ரேஷன் அரிசி…மத்திய அமைச்சர்கள் வருகை!! அலறவிடும் தமிழக அரசு!!

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர உள்ளதால் தமிழ்நாட்டில் ஆதரவை திரட்ட பிரதமர் மோடி பல புதிய செயல்பாடுகளை அமல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் மாதந்தோறும் 50 முதல் 70 அமைச்சர்களை அனுப்பப் போவதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு திட்டங்கள் அனைத்தும் பயனாளிகளுக்கு சரியாக சென்றடைகிறதா என்பதை விசாரிக்க இவர்களை அனுப்புவதாக கூறியுள்ளார்.தமிழகத்தில் மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் அரசியை தரமற்றதாக திமுக தருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.இதற்கு  தமிழக உணவுத்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சென்னைக்கு வந்திருந்தபோது நியாய விலைக் கடைகளுடைய கட்டமைப்பு பற்றி பிரசன்டேஷன் சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இது குறித்து டெல்லியில், தமிழ்நாட்டின் நியாய விலைக் கடை குறித்து அனைத்தையும் தமிழக உணவுத்துறை முதன்மை செயலாளர் பிரசன்டேஷன் மூலமாக விளக்கம் அளித்தார். இதனைப் பார்த்த பியூஷ் கோயல் தமிழ்நாட்டில் நியாய விலை கடைகளில் உள்ள கட்டமைப்பு மற்றும் முறைகள் அனைத்தும் பிரமிக்க வைக்கிறது என பாராட்டினார்.

இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தற்பொழுது தமிழகத்தில் நடக்கும் ஆட்சியை குறை சொல்லும் வகையில் அவர் கட்சிக்காரர்களின் பேச்சை மட்டும் கேட்டுவிட்டு நியாய விலை கடைகளின் பொருள் தரமற்றதாக உள்ளது என கூறியுள்ளார். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இவர் நேரடியாக நியாய விலை கடைகளுக்கு சென்று அங்கு வழங்கப்படும் அரிசி மற்றும் இதர பொருட்களை சோதனை செய்து, சொன்னால் கூட அவர் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியும். எதனையுமே செய்யாமல் அவரது கட்சிக்காரர்கள் கூறுவதை அப்படியே மக்களிடம் ஒப்பிப்பது நியாயமற்றது. அதுமட்டுமின்றி இந்திய உணவு கழகம் மக்களுக்கு வழங்கப்படும் அரிசி எந்த தரத்தில் இருக்க வேண்டும் என அளவுக்கு குறியீடு ஒன்றை நிர்ணயம் செய்துள்ளது.

அந்த அளவுக்கு குறியீடு படி இருந்தால் மட்டுமே அரிசியை கிடங்கிற்கு அனுப்ப முடியும். இதனை இந்திய உணவுக் கழக அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் மத்திய அரசு வழங்கும் அரிசியை நாங்கள் எப்படி தரமாற்றதாக மக்களுக்கு வழங்க முடியும்? என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கேள்வி எழுப்பி உள்ளார். அதுமட்டுமின்றி மாதம் தோறும் 50 முதல் 70 மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்து ஆய்வு செய்யப் போவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் மக்கள் முன்னிலையில் சொக்குப்பொடி போட இப்படி ஒரு நாடகம் ஆடுகின்றனர்.