Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கமல்ஹாசனுக்கு அதிர்ச்சி கொடுத்த முக்கிய நிர்வாகி!

சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்டவை உடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் மக்கள் இணையும் கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் படுதோல்வி கண்டது. இதனையடுத்து அந்த கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகத்தொடங்கினார்கள்.

இந்த சூழ்நிலையில், அந்த கட்சியின் ஆதிதிராவிட நல அணியின் மாநிலச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்வதாக ஜெகதீஷ் குமார் அறிவித்திருக்கிறார். கமலஹாசன் அவர்களுக்கு ஜெகதீஷ் குமார் எழுதிய கடிதம் ஒன்றில் மக்கள் நீதி மையம் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆதிதிராவிட பூவை ஜகதீஷ் குமார் ஆகிய நான் மக்கள் நீதி மையம் கட்சியில் இருந்து உடனடியாக விளகுகின்றேன் என்று தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறு ஒரு முடிவை நான் இன்றைய தினம் எடுத்ததற்கு என்ன காரணம் என்பதை எல்லோருக்கும் தெரிவிப்பது என்னுடைய கடமை என்று கருதுகிறேன். 2018 ஆம் வருடம் தலைவர் கமல்ஹாசனின் அரசியலுக்கு அழைப்பு விடுத்தார். அன்றிலிருந்து கட்சிக்காக உண்மையாகவும், நேர்மையாகவும், இருந்து வந்தேன். 2019 ஆம் வருடம் நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு பூந்தமல்லி தொகுதியில் வாய்ப்பு கொடுத்தார். 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி என்று தெரிவித்திருக்கின்றார்.

மக்கள் நீதி மையம் கட்சிக்கு இரண்டு வருடகாலமாக மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது. அதன்பிறகு சம்பந்தமில்லாத வியாபார நிறுவனங்கள் கற்றுக்கொள் செயல்பட்டு வந்ததன் காரணமாக, கட்சி தொண்டர்களிடையே வரவேற்பை இழந்துவிட்டது. அதோடு 2021 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தனித் தொகுதியில் போட்டியிட மறுத்துவிட்டார். கூட்டணி கட்சிக்கு சக்திக்கு மீறிய தொகுதிகளை கொடுத்ததன் காரணமாக கட்சியை சீர்குலைத்து விட்டார்கள் என்று தெரிவித்திருக்கின்றார்.

அதோடு கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபட்ட மாநில நிர்வாகிகளுக்கு குறிப்பாக கோவை டாக்டர் மகேந்திரன் கடும் உழைப்பை நிராகரித்திருக்கிறார். அவர் மீது வீண்பழி தெரிவித்து கட்சியில் இருந்து நீக்கியதால் கட்சியின் கட்டமைப்பு பரி போய்விட்டது என்று தெரிவித்திருக்கிறார். தீவிரமாக செயல்பட்ட என்னைப்போல உண்மையான செயல் வீரர்களுக்கு தங்களுடைய தலைமையை செயல்பாட்டின் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது. ஆகவே இந்த சூழ்நிலையில் என்னுடைய பொறுப்புகளிலிருந்து விடுவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கின்றார்.

Exit mobile version