Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

Poovarasu Maram: உங்கள் வீட்டிற்கு அருகில் இருந்த மரம் உள்ளதா? கட்டாயம் இதை பாருங்க..!

Poovarasu Maram

Poovarasu Maram: நம்மை சுற்றி அரிய பலவகையான மரங்கள் உள்ளன. ஆனால் அந்த மரங்களின் மருத்துவ குணங்கள் நமக்கு தெரியாமலேயே போய் விடுகிறது. சில மரங்கள் பற்றி நமக்கு ஏதோ ஒருவகையான மரம் தான் என்று கண்டுக்கொள்ளாமல் போய்விடுகிறோம்.

அந்தவகையில் 80ஸ், 90ஸ் பிள்ளைகளால் அதிகம் அறியப்பட்ட ஒரு மரம் தான் இந்த பூவரசு மரம். இந்த மரத்தின் இலையை பறித்து அதனை சுருட்டி ஊதல் போன்று செய்து வாயில் வைத்து ஊதி மகிழ்வார்கள்.

மேலும் இந்த மரத்தில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும் பார்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும். இந்த மரத்தின் பூவை சங்ககால இலக்கியங்களில் குடசம் மலர் என்று குறிப்பிட்டுள்ளனர். சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களில் இதனை பற்றி அறிந்துக்கொள்ளலாம். மேலும் இந்த பூவரசு மரத்தின் மருத்துவ பயன்களை பற்றி இந்த பதிவில் (poovarasu maram payangal in tamil) காணலாம்.

பூவரசு மருத்துவ பயன்கள்

பூவரசு மரம் தோல் வியாதிகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. இந்த மரத்தின் வேர், இலை, பூ, பட்டை என்று அனைத்தும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இந்த பூவரசு இலையை அரைத்து தோலில் ஏற்பட்டுள்ள அரிப்புக்கு தடவி வர அரிப்பு குணமாகும்.

பூவரசு பட்டை சிறிதளவு எடுத்து நீரில் போட்டு கொதிக்க வைத்து அதனை காலை வெறும் வயிற்றில் குடித்து வர வயிற்றுப்போக்கு போகும். அப்போது நமது உடலில் உள்ள அனைத்து கழிவுகளும் வெளியேறிவிடும். இதனால் உடல் சுத்தமாகும். மேலும் வயிற்றுப்போக்கு நிற்க வேண்டும் என்றால் மோர் குடித்தால் நின்றுவிடும்.

இந்த இலைகளை பறித்து வந்து நிழலில் உலர்த்தி அதனை பொடி செய்து தேங்காய் எண்ணெய்விட்டு கலந்து தேமல், சொரியாஸ், பூச்சிக்கடிக்கு போட்டு வர குணமாகிவிடும்.

மேலும் இந்த மரம் அதிகப்படியான நச்சுக்காற்றை உள்ளிழுத்து சுத்தமான காற்றை வெளியிடுகிறது. எனவே இந்த மரம் வீடுகளில் இருந்தால் நல்லது தான். புயலிலும் சாயாத மரமாக உள்ளது.

இந்த மரத்தின் விதைகளை உலர்த்தி அதிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. அந்த எண்ணெய் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக (poovarasan tree uses in tamil) பயன்படுகிறது.

மேலும் இந்த பூவரசு மரத்தை காயகல்ப மரம் என்றும் கூறுவார்கள்

மேலும் படிக்க: உங்கள் வீட்டிற்கு முன் புங்கை மரம் உள்ளதா? கட்டாயம் இதை பாருங்க..!

Exit mobile version