கரோனோ வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் முடங்கி இருக்கிறது. இதனால் பொருளாதாரம் மிகவும் சீர்குலைந்துள்ளது. இதனை மீட்க கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுவது வங்கிகள் தான்.
இந்த இடைக் காலங்களில் ஏற்பட்ட சரிவை ஈடுகட்ட பணி இழப்பு செய்யப்போவதாக எச்எஸ்பிசி வங்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் காரணமாக 13 பில்லியன் டாலர்கள் வாராக் கடனாக உயரும் என்று அந்த வாங்கிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஏற்கனவே திட்டமிட்டபடி மறு கட்டுமான திட்டத்திற்கு வாராக் கடன் தோதாக இருக்கும் என எச்எஸ்பிசி வங்கியின் தலைவர் நோயல் குயின் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணி நீக்கத்தில் 35 ஆயிரம் பேர் அடங்குவர் என அவர் தெரிவித்துள்ளார். ஐரோப்பாவின் மிகப் பெரும் வங்கியாக செயல்படும் எச்எஸ்பிசி வங்கியானது, வரி செலுத்துவதற்கு முன்பே லாபத்தில் 65 சதவிகிதம் இழப்பை ஆண்டின் பாதியிலேயே சந்தித்துள்ளது. மேலும் இது கணிக்கப் பட்டதை விட மோசமாக உள்ளதாகும். கரோனா வைரஸ் காரணமாக, வாராக்கடனின் அளவு அதிகரித்ததாக கூறப்படுகிறது.
மேலும் ஐரோப்பா பிரிட்டனின் பெரிய வங்கியாக கருதப்படும் எச்எஸ்பிசி வங்கி நிறுவனத்தில் 2 லட்சத்து 35 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள். இவர்களில் 35 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யப்போவதாக கடந்த ஜூன் மாதமே அறிவித்திருந்தது. இது கரோனா பரவலின் காரணமாகவே பணிநீக்கம் ஆனது கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
மேலும் எச்எஸ்பிசி வங்கி நிறுவனத்தின் தலைமையகம் லண்டனில் இருந்தாலும், வங்கியின் மொத்த வருவாயில் பெரும்பங்கு ஆசியாவில் உள்ள ஹாங்காங்கிலிருந்தே பெறப்படுகிறது. மேலும் இதில் அரசியல் சூழலாக சீனாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையே ஏராளமான அரசியல் குழப்பங்கள் ஏற்படுவதால் இந்த வங்கி நிறுவனம் மிகப் பெரும் சவால்களை சந்தித்து வருகிறது.
மேலும் ஹாங்காங்கின் மீது ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவின் தேசிய பாதுகாப்பு சட்டத்தை, எச்எஸ்பிசி வங்கி நிறுவனம் ஆதரித்துள்ளது. இதனை அமெரிக்காவும், பிரிட்டனும் கடுமையாக எதிர்த்து கண்டனம் தெரிவித்துள்ளது.