Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

லேப்டாப் விற்பனையை நிறுத்தும் பிரபல பிராண்டட் கம்பெனி

ஆசியாவின் பெரும் தொழில் நுட்ப நிறுவனமான டொஷிபா(TOSHIBA) தனது லேப்டாப் விற்பனையில் வியாபாரத்தினை நிறுத்துவதாக கூறியுள்ளது.

ஜப்பானைச் சேர்ந்த பிரபல தொழில்நுட்ப நிறுவனம் டொஷிபா. எலக்ட்ரானிக் துறையில் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனமாக இருந்து வருகிறது. இதன் லேப்டாப் தயாரிப்பானது தற்போது விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளது.

கணினி பயன்பாடுகள் மிகவும் பிரசித்தி வாய்ந்தது. மேலும் மடிக்கணினிகள் பயன்பாட்டிற்கு சிறந்ததாக இருக்கும். ஆனால் தற்போது திடீரென்று தனது வியாபாரத்தை நிறுத்துவதாக முடிவு செய்துள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஷார்ப் நிறுவனத்திற்கு 80.1 பங்குகளை விற்றிருந்தது. மேலும் மீதமுள்ள 19.9 பங்குகளையும் அதை நிறுவனத்திற்கு விற்பதாக டோஷிபா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

1985 ஆம் ஆண்டு முதல் எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் லேப்டாப் விற்பனைக்கு டொஷிபா வந்தது. Satellite பெயரில் IBM ThinkPad வரிசைக்கு போட்டியாக சந்தைக்குள் வந்தது. 1990 முதல் 2000-ன் ஆரம்பத்தில் கணினி உற்பத்தியில் முன்னணி நிருவனமாக இருந்தது. பின்பு எச்பி, லெனோவா, டெல் போன்ற நிறுவனங்களின் போட்டியை அதன் வளர்ச்சி குன்றியது.

2011 ஆம் ஆண்டு 1.77 கோடி லேப்டாப்களை விற்ற டொஷிபா நிறுவனம், 2017 ஆம் ஆண்டு 10.4 லட்சம் லேப்டாப்புகளை மட்டுமே விற்க முடிந்தது. இதனால் டொஷிபாவின் பங்குகளை விற்று விற்பனைகளை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.

Exit mobile version