Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல ராப் பாடகர் சர்ச்சையாக பேசியதால் கைது செய்யப்பட்டார் – ஸ்பெயின்!

வெளிநாடுகளில் வெகு விமர்சையாக இசை நிகழ்ச்சி நடைபெறுவதும் மற்றும் பெரும்பாலும் ராப் பாடல்களை மக்கள் விரும்பி வருகின்றனர். ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பிரபல ராப் பாடகர் பப்லோ என்பவர், ‘நாட்டை குறித்து சர்ச்சையாக பேசியதால் கைது செய்யப்பட்டுள்ளார்’.

இவருடைய ஆதரவாளர்கள் இவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும்பான்மையான இடங்களில் கலவரமாகவே உள்ளது. ரசிகர்கள் எவ்வளவு தான் போராட்டத்தில் ஈடுபட்டாலும் கடைசியில் ‘பாதிக்கப்படுவது சாதாரண மக்கள்’ என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்நிலையில் பார்சிலோனா நகரில் தீவிர போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டுள்ளனர். மக்கள் அப்போது ஒரு கட்டத்தைத் தாண்டி பேருந்துகள், கடைகள், அரசின் பொதுச்சொத்துக்களை தாக்கியுள்ளனர். இதை தடுக்க முயன்ற போது காவல் அதிகாரிகளையும் மக்கள் தாக்கியுள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் காவலர்கள் மீது கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. காவலர்களும் மக்களைப் போன்று “சராசரியான மனிதர்கள்” என்பதை அந்த போராட்டக்காரர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Exit mobile version