Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரபல UPI செயலிக்கு தடை! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

பிரபல UPI செயலிக்கு தடை! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!

வணிக சின்னம் மற்றும் லோகோ தொடர்பாக போன் பே நிறுவனம்,சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை இன்று நீதிபதி சுந்தர் அடங்கிய குழு விசாரணை நடத்தியது.

போன் பே நிறுவனம் வணிக சின்னம் மற்றும் லோகோ ஆகியவற்றை எங்களைப் போன்றே,மொபைல் பே நிறுவனம் வைத்துள்ளதாக மொபைல் பேய் நிறுவனத்தின் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, இரண்டு நிறுவனங்களின் வணிகச் சின்னம் மற்றும் லோகோ ஆகியவை அச்சு அசல் ஒரே மாதிரி இல்லை எனினும்,சாதாரண பொதுமக்களுடைய பார்வையில் அதைப் பார்க்கும்போது, அவை இரண்டும் ஒரே தோற்றத்தில் இருப்பதற்கான முகாந்தரங்கள் இருக்கின்றன என்று கூறி மொபைல் பே செயலிக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலியை கூகுள் பிளே மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்குவது குறித்து கோரிக்கைக்கு பதில் அளிக்குமாறு கூகுள் நிறுவனத்திற்கும்,ஆப்பிள் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கினை நீதிபதிகள் ஒத்தி வைத்துள்ளனர்.

Exit mobile version