Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விரைவில் புதிய கட்சி தொடங்கும் பிரபலம்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!

Popularity to start a new party soon

Popularity to start a new party soon

விரைவில் புதிய கட்சி தொடங்கும் பிரபலம்.. வெளியான அதிரடி அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் ஏற்கனவே பல கட்சிகள் உள்ள நிலையில், சமீபகாலமாக புதிது புதிதாக கட்சிகள் முளைத்து வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் தான் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார்.

அவரை தொடர்ந்து தற்போது நடிகர் விஷாலும் 2026ஆம் ஆண்டு அரசியலுக்கு வர இருப்பதாகவும், மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில் புதிய கட்சி தொடங்க இருப்பதாகவும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அந்த பரபரப்பு அடங்கும் முன்பே மற்றொரு பிரபலம் புதிதாக கட்சி தொடங்க உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

அவர் வேறு யாருமல்ல சவுக்கு சங்கர் தான். ஆரம்பத்தில் காவல்துறையில் பணியாற்றி வந்த சவுக்கு சங்கர் பணியில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காவலர் பணியில் இருந்து விலகி அவருக்கென தனி பாதையை வகுத்து அதில் செயல்பட்டு வருகிறார். அதன்படி, யூடியூப் சேனல் தொடங்கியுள்ள சவுக்கு சங்கர் காவல்துறையில் நடக்கும் ஊழல்கள் மற்றும் அரசியல் ஊழல்கள் குறித்து பதிவு செய்து வருகிறார்.

இதனால் காவல்துறையினரும் அரசியல்வாதிகளும் இவர் மீது பல வழக்குகளை தொடுத்துள்ளனர். இவரும் அனைத்தையும் அசால்ட்டாக கையாண்டு வருகிறார். இவரின் சேனலை லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். இவருக்கு எந்த அளவிற்கு ஆதரவு உள்ளதோ அதே அளவிற்கு எதிர்ப்பும் உள்ளது. அதுமட்டுமல்ல இவர் மீது பல்வேறு விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.

ஆனால் இவை எதைப்பற்றியும் கவலைப்படாத சவுக்கு சங்கர் புதிதாக கட்சி ஒன்றை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். அதன்படி, செப்டம்பர் மாதத்தில் சவுக்கு அமைப்பு தொடங்க இருக்கிறது. பெயர், கொடி, கொள்கைகள் விரைவில் அறிவிக்கப்படும் என அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Exit mobile version