ஆபாச மற்றும் அநாகரீகமான உள்ளடக்கத்தைக் காட்டியதற்காக 18 ஓடிடி தளங்களின் மீது கடும் நடவடிக்கை எடுத்து அவற்றை முழுவதுமாக தடை செய்துள்ளது.
மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் முருகன் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பதாவது :-
இன்றைய கால சூழலில் பல்வேறு தரப்பினரும் பல்வேறு வகையான ஓடிடித்தளங்களை பயன்படுத்தி வருகின்றனர்.இது சிலருக்கு சாதகமாகவும் அமைகிறது.ஓடிடி தளத்திர்கு தணிக்கை இல்லாத காரணத்தால் சிலர் இதனை ஆபாச மற்றும் ஆநாகரீக செயல்களுக்கு பயன்படுத்தி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், திரைப்படங்கள் மற்றும் வலைத் தொடர்களில் அதிகப்படியான வன்முறை மற்றும் பாலியல் காட்சிகள் பொதுவானதாகிவிட்டன. இந்நிலையில், முழுக்க முழுக்க எதிர்மறையான நோக்கத்துடன் செயல்பட்டு வந்த 18 ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளார்.
இவை மட்டுல்லாமல், பல இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன என்று செய்தித்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நாடாளுமன்ற கூட்டத்தில் தெரிவித்தார்.
ஓடிடி தளங்கள் மீதான தணிக்கை :-
இதற்கு நீண்ட காலமாக எதிர்ப்பு கிளம்பி வரும் வேளையில் தற்போது ஓடிடி தளங்களுக்கும் தணிக்கை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, கலாச்சார சீர்கேடு, போதைப் பொருள் பழக்கம், குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருவதால், ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படம் மற்றும் வெப் தொடர்களுக்கும் தணிக்கை அளிக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும் , இதற்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.