பிக்பாஸ் பிரபலத்துக்கு ஆபாச மெசேஜ்! தமிழக போலீசின் அதிரடி!

0
199
Porn message to Big Boss celebrity! State police action!

தமிழ் ,தெலுங்கு ,இந்தி ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனம் செட்டி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவர் சினிமா மட்டுமின்றி மாடலிங்கும் செய்து வருகிறார்.இவர் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற அனைத்து சமூக வலைதளங்களிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பார். பிக்பாஸில் பிரபலமானதால் இவருக்கு பின்தொடர்பவர்கள்(followers) அதிகம்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தினமும் ஒரு புகைப்படத்தை பதிவிடுவார். சில நாட்களாகவே ஏதோ ஒரு ஃபேக் ஐடி மூலம் அவரது புகைப்படத்திற்கு ஆபாசமாக ஒரு மர்ம நபர் கமெண்ட் செய்து வந்துள்ளார்.

ஆரம்பத்தில் அதனை எளிதாக எடுத்துக் கொண்ட சனம், இது தினமும் தொடர்வதால் பொறுமை இழந்து திருவான்மியூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை  பதிவு செய்தார். இதனை தொடர்ந்து திருவான்மியூர் போலீஸ், அதனை அடையாரில் உள்ள சைபர் கிரைம் போலீஸில் ஒப்படைத்தது. அந்த சைபர் க்ரைம் போலீஸின் அதிரடி நடவடிக்கையால் அந்த போலி ஐடியை உபயோகித்தது, திருச்சியை சேர்ந்த ஒரு கல்லூரி மாணவன் என தெரியவந்தது . உடனே போலீசார் விரைந்து அந்த மாணவனை கைது செய்தனர்.

ஆரம்பக்கட்ட விசாரணையில், தான் இதனை தெரியாமல் செய்ததாக கூறி போலீசிடம் மன்னிப்பு கேட்டு மன்றாடி உள்ளான் . தொடர்ந்து போலீஸின் கிடுக்கிப்பிடி விசாரணையில் இதனை இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டாக செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இது போல் பலருக்கும் ஃபேக் ஐடியை மூலம் ஆபாசமாக கமெண்ட் மற்றும் மெசேஜ் செய்வது தெரிய வந்துள்ளது. மேலும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இவ்வளவு அதிரடியாக செயல்பட்டு அந்த மாணவனை கைது செய்த போலீசுக்கு சனம் ஷெட்டி மிகவும் நன்றி என தெரிவித்துள்ளார்.