Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காங்கிரஸ் கட்சியில் 2 கோஷ்டிகள் இடையே பதவி சண்டை!! 

#image_title

காங்கிரஸ் கட்சியில் 2 கோஷ்டிகள் இடையே பதவி சண்டை!!

நிலையத்தில் திரண்டதால் தலைசுற்றி கிறுகிறுத்து போன போலீசார்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள்உள்ளன.

இதில் ஏற்கனவே நகர தலைவராக ஜெயவேல் என்பவர் பதவி வகித்து
வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக பொன்னையன் என்பவர் நான் தான் நகர தலைவர் என தலைமை
என்னை அறிவித்துள்ளதாக கூறி கட்சி பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும் ஜெயவேல் மற்றும் பொன்னையன் ஆகிய இரு கோஷ்டிகளாக ஆரணியில்
செயல்பட்டு வந்தனர்.

இன்று திடிரென ஆரணி நகர காவல்நிலையத்தில் ஜெயவேல்
கோஷ்டியினர் ஓன்று திரண்டு டி.எஸ்.பி ரவிசந்திரனிடம் முறையிட்டு நான்ஜெயவேல் தான் நகர தலைவர் என கூறினார்கள்.

மேலும். மற்றொரு கோஷ்டியான பொன்னையன் என்பவர் மாவட்ட தலைவர் அண்ணாமலை
பரிந்துரையில் மாநில தலைவர் என்னை நியமித்துள்ளதாக ஓரு ஆவணத்தை
சமர்பித்துள்ளார்.

இதனால் போலீசார் தலைசுற்றி கிறுகிறுத்து போனார்கள்.

என்ன செய்வதென்றுதெரியாமல் திகைத்த போலீசார் இருதரப்பினர் ஒன்றிணைந்து மாநில தலைமையில்சென்று பேசி சுமூகமாக தீர்த்து கொள்ளுங்கள் என்று கூறி தலைவர்கள்

சிலைக்கு மாலை போடும் போது கட்சி பதவியை குறிப்பிடமால் காங்கிரஸ் கட்சிஎன கூறி மாலை அணியுங்கள் என போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர்.

காங்கிரஸ் கட்சியயை சேர்ந்த 2 கோஷ்டிகள் இடையே பதவி சண்டையால்
காவல்நிலையத்தில் திரண்ட சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம்பரபரப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version